ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டரில் மூன்று பேர் பயணித்ததாகவும், மர்வா பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.