ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட், கோ பைலட் உள்பட மூன்று பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலைப் பிரதேசமான கிஷ்த்வார் மாவட்டம் மார்வா பகுதியில் மச்னா கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து ராணுவ தரப்பில், “ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளானது. பைலட்டுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆனால், பாதுகாப்பாக உள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜம்முவில் நடந்த விபத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவியேஷன் சீட்டா ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் 2 விமானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.