விளாடிமிர் புடினை கொலை செய்யும் நோக்கில் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்ததாக கூறி அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய வேண்டும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கொந்தளித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை படுகொலை செய்ய
மாஸ்கோ நகரில் அமைந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து ட்ரோன் விமானம் ஒன்று நெருங்கியது.
குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தில், ரஷ்ய ஜனாதிபதியை படுகொலை செய்ய உக்ரைன் அனுப்பிய ட்ரோன் விமானம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Credit: East2West
ஆனால் தங்கள் தரப்பில் இருந்து அப்படியான ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கமளித்துள்ளார்.
சம்பவத்தின் போது 70 வயதான விளாடிமிர் புடின் ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை எனவும், அந்த ட்ரோன் தாக்குதலில் எவரும் காயம்படவும் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பழிக்கு பழி வாங்க வேண்டும் என ரஷ்ய ஆதரவு நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக செயல்படும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியான திமித்ரி மெத்வெதேவ் தெரிவிக்கையில்,
Credit: East2West
படுகொலை செய்யப்பட வேண்டும்
ஜெலென்ஸ்கி கட்டாயம் படுகொலை செய்யப்பட வேண்டும் என்றார்.
மேலும், இன்றைய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜெலென்ஸ்கியையும் அவரது குழுவினரையும் படுகொலை செய்து அகற்றுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என கொந்தளித்துள்ளார்.
@reuters
ரஷ்ய ஜனாதிபதி மாளிகை மீதான ட்ரோன் தாக்குதலை பயங்கரவாத செயல் என குறிப்பிட்டிருந்தது புடின் நிர்வாகம்.
ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவிக்கையில், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.
உக்ரைனின் பயங்கரவாத ஆட்சியை அகற்றும் திறன் கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் கோருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
@AP