திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது.
இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும்.
அந்த வகையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும் நாளான இன்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.