சென்னை தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “மது நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது. அண்மையில் நடந்த ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது. […]