கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிதாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
அதன் படி 1 ஜனவரி 2022 அன்று தாம்பரம் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முறைப்படி துவக்கி வைத்தார். கூடுதல் தலைமை காவல் தலைவர் எம். ரவி தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராக பதவியேற்று இவரது பணி ஓய்விற்கு பின்னர் புதிய காவல் ஆணையராக கூடுதல் காவல் தலைவர் அமல்ராஜ் நியமிக்கப்பட்டார்.
தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்படும். முன்னதாக தாம்பரம் காவல் ஆணையரகத்தை நிறுவதற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் தலைவர் எம். இரவி நியமிக்கப்பட்டார்.
தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகம் தற்காலிகமாக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தாம்பரம் காவல் கமிஷனர் அலுவலகம் மேலக்கோட்டையூரில் உள்ள காவல் துறை பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.