டில்லி பாஜகவின் அரசியலே மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.. கடந்த சில நாட்களாக மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே இருந்த மோதல், நேற்று திடீரென அதிகரித்தது. நேற்று பழங்குடி ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றதை அடுத்து, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]