போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, லெப்டினன்ட் கேர்ணல் ரக்ஷித லியனகே மற்றும் மேஜர் அனோஜ் டி சில்வா உட்பட ரணவிரு சேவா அதிகாரசபையின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.