பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில், பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரண்டு என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புபடையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, Kreeri பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை, வீரர்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.