பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்.. வரிசைக்கட்டி கிளம்பும் இந்தியர்கள்.. அட இந்த நடிகையுமா?

லண்டன்:
பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் பிரம்மாண்ட முடிசூட்டு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
பிரிட்டன் அரசியாக நீண்டகாலமாக பதவியில் இருந்த ராணி எலிசபெத் கடந்த ஆண்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு அவர் வேல்ஸ் இளவரசராக இருந்தார். பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்ற போதிலும் அவர் முறைப்படி பதவியேற்கவில்லை. ராணி இறந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாக, இத்தனை நாட்களாக முடிசூட்டு விழா தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், நாளை மறுதினம் (மே 6) முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. புதிய மன்னராக அதிகாரப்பூர்வமாக சார்லஸ் பதவியேற்பதை முன்னிட்டு ஒட்டுமொத்த பிரிட்டனே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக, லண்டன் முழுவதும் அலங்கார விளங்குகளால் ஜொலிக்கிறது.

இந்நிலையில், இந்த விழாவுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள், நட்சத்திரங்கள், பெரும் பதவிகளை வகிப்பவர்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கும் இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

ஜக்தீப் தன்கர்: அதன்படி, இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அவரால் இந்த விழாவுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு பதிலாக துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சோனம் கபூர்:
இதேபோல, பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனம் கபூர் பிரிட்டன் குடிமகனான ஆனந்த் அஹுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து லண்டனில் வசித்து வருகிறார். இந்த விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செளரப் பாக்தே:
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல கட்டிட கலைஞர் செளரப் பாக்தேவும் முடிசூட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். மன்னர் சார்லஸ் நடத்தி வரும் பிரின்ஸ் அறக்கட்டளையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் செளரப் பாக்தே. அந்த வகையில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கல்ஃப்ஷா:
இந்தியாவைச் சேர்ந்த கல்ஃப்ஷா என்ற பெண்ணுக்கும் பிரிட்டன் அரண்மனை சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவர் மன்னர் சார்லஸ் நடத்திய தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவர் ஆவார். இவரது சமூகப் பணியை பாராட்டு கடந்த ஆண்டு கல்ஃப்ஷாவுக்கு பிரின்ஸ் அறக்கட்டளை சார்பில் குளோபல் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தவிர, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.