வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பீஹாரில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, ஜன.,7 முதல் 21 வரை நடந்தது. இரண்டாவது கட்டமாக, ஏப்., 15 முதல் மே 15 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சாதி, குடும்பத்தில் எத்தனை பேர், ஆண்டு வருமானம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மொபைல் போன் செயலி வழியாக பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை தொடர்ந்தவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக்கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் அமர்வு, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்களை, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யாரிடமும் பகிரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர். வழக்கை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement