பெண் தொழிலதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நகை, பணத்தை சுருட்டிய பெண்.. வெளிநாடுகளுக்கு தப்பாமல் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்..!

கோவையில் பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிக்கன் குழம்பில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து, 100 சவரன் நகை, 2 கோடி பணத்துடன் தலைமறைவான பெண் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

60 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஸ்வரியின் வீட்டிலிருந்த நகை பணத்தை அள்ளிச்சென்ற அந்த வழக்கில், இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய நபரான வர்ஷினியையும், நவீன் என்பவரையும் தேடி வரும் போலீசார், வர்ஷினி வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க, கோவை, கேரளா, திருச்சி, மதுரை உட்பட முக்கிய விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.