மத்தகம்: அதர்வா, நிகிலா இணையும் வெப் சீரீஸ்
வளர்ந்து வரும் இளம் நடிகர் அதர்வாவும், நிகிலா விமலும் இணைந்து நடிக்கும் வெப் தொடர் மத்தகம். இவர்களுடன் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா தயார்த்துள்ள இந்த தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாகிறது.
தொடர் பற்றி இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறியதாவது: 'மத்தகம்' என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம் பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். என்றார்.