மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
லண்டன் மற்றும் விப்ஸ்னேட் உயிரியல் பூங்காக்களை கொடிகள் உள்ளிட்டவற்றால் ஊழியர்கள் அலங்கரித்துள்ளனர்.
கொரில்லாக்கள் முதல் மீர்கட்ஸ் வரை விலங்குகளின் கூடாரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு உயிரியல் பூங்காக்களும் சர்வதேச பாதுகாப்பு தொண்டு நிறுவனமான லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த பூங்காக்கள் 1826-ம் ஆண்டு முதல் பிரிட்டன் அரச குடும்பத்தின் ஆதரவுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.