மகாராஷ்டிரா மாநிலம் பயந்தரில் உள்ள தாக்கூர் காலிக்கு வெளியே தள்ளுவண்டியில் வைத்து மாற்றுத்திறனாளி பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் நான்கு வாழைப்பழங்களை இலவசமாக தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், வியாபாரியை அடித்து உதைத்து பலவந்தமாக தரையில் தள்ளினார். இதில் பழ வியாபாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விரைந்து வந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.. நடுரோட்டில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த பழ வியாபாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.