மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை 30 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
அந்த துறைமுகத்திற்கான நிலங்களை குத்தகைக்கு எடுக்க மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 720 கோடியையும், மற்ற பணிகளுக்கு சுமார் 296 கோடி ரூபாயையும் அதானி நிறுவனம் செலவிட்டு இருந்தது.
இந்நிலையில், அந்த துறைமுகத்தை 750 கோடி ரூபாய் குறைவாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.