பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு ஒன்று தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
குடியரசாக, வேகமாக திட்டமிட்டுவரும் நாடு
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
அந்த 14 நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, வேகமாக, குடியரசாகும் முயற்சிகளைத் துவக்கியுள்ளது. எங்களுக்கு இனி மன்னர் வேண்டாம், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம் என விரைவில் முடிவு செய்ய இருக்கிறது ஜமைக்கா.
sky news
காரணம் என்ன?
பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் கஷ்டங்கள் அனுபவித்த பல நாடுகள் மறைந்த எலிசபெத் மகாராணியார் தங்கள் ராணியாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் மறைந்து, சார்லஸ் மன்னரானதும், அவரை தங்கள் மன்னராக ஏற்றுக்கொள்வதில் பல நாடுகள் தயக்கம் காட்டிவருகின்றன.
கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில், தங்களுக்கு மன்னர் சார்லஸ் வேண்டாம் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகத் துவங்கியாயிற்று.
sky news
இந்நிலையில், சிறிய நாடுகள் சில, துணிச்சலாக தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளன. அவற்றில் ஜமைக்கா ஒன்று.
அடுத்த ஆண்டில், அதாவது, 2024இலேயே புதிய அரசியல் சாசனம் ஒன்றை எழுத ஜமைக்கா தயாராக இருப்பதாக தெரிவிக்கும் ஜமைக்காவின் சட்டம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்கள் துறை அமைச்சரான Marlene Malahoo Forte, ஜமைக்காவை ஜமைக்கா நாட்டு மக்கள் கையில் கொடுப்பதற்கும், பிரித்தானியாவுக்கு விடைகொடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்கிறார்.
sky news
காலனி ஆதிக்கத்தின்போது பிரித்தானியாவுக்காக வேலை செய்வதற்காக அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் அடைந்த துயரங்கள் ஏராளம்.
சமீபத்தில் ஜமைக்கா வந்த இளவரசர் வில்லியம் இதுகுறித்து பேசும்போது, அடிமைத்தனம் மோசமானது, அது நடந்திருக்கவே கூடாது என்றார். ஆனாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்னும் வருத்தம் ஜமைக்கா மக்களுக்கு இருக்கிறது.
sky news
ஆக, பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், மன்னராட்சியின் கீழிருக்கும் நாடு ஒன்று விரைவில் குடியரசாக இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது, நிச்சயம் மன்னருக்கு கவலையளிக்கும் ஒரு செய்தியாகத்தானே இருக்கமுடியும்!