தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் எந்த தேதியில் அவர் வெளிநாடு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த 2022 மார்ச் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 4 நாள் சுற்றுப்பயணமாக துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்து விட்டார்.
அந்த வகையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.