பிரித்தானியாவில் Marks and Spencer பல்பொருள் அங்காடி காவலாளி ஒருவர் திருடனை முகத்தில் குத்துவிட்டதில் இறந்து போன வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குற்றவாளி என உறுதி
குறித்த நபருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடுவர் மன்றம் இன்று நான்கு மணிநேரம் இந்த வழக்கை விவாதித்து தொடர்புடைய காவலாளி Sabeur Trabelsi என்பவரை குற்றவாளி என உறுதி செய்துள்ளது.
Image: HNP Newsdesk
கடந்த ஆண்டு மார்ச் மாதம் Marks and Spencer பல்பொருள் அங்காடி வளாகத்திற்கு வெளியே வீடற்ற Jason Page என்பவரை தலையில் குத்துவிட்டதாக கூறுகின்றனர்.
அவர் Marks and Spencer கடையில் இருந்து திருடியதாகவும், அதனாலையே காவலாளி Sabeur Trabelsi தாக்கியதாகவும் கூறுகின்றனர்.
இதில் சுருண்டு விழுந்த Jason Page தலையில் பலத்த காயம்பட்டு, அந்த காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை மட்டுமின்றி, மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
முஷ்டியால் தலையில் தாக்க
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Sabeur Trabelsi தமது வாதத்தில், Jason Page சம்பவத்தின் போது மது அருந்தியிருந்ததாகவும், இதனாலையே தடுமாறி விழுந்து தலையில் காயம் பட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Image: HNP Newsdesk
மேலும், தாம் அவரை முஷ்டியால் தலையில் தாக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகள் அவருக்கு எதிராக அமைந்தது.
தற்போது கொலையாளி என நீதிமன்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், 8 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.