துருக்கி ராணுவம், மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாய் ஒன்றை பரிசளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மெக்சிகோ ராணுவத்தைச் சேர்ந்த Proteo என்ற மோப்ப நாய் உயிரிழந்தது.
அதற்கு ஈடாக, Arkadas என பெயரிடப்பட்ட இந்த நாயை, துருக்கி, மெக்சிகோவுக்கு பரிசளித்துள்ளது.
பிறந்து 3 மாதமேயான இந்த நாய், பயிற்சி அளிக்கப்பட்டு மெக்சிகோ ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.