சென்னை: பிரபல நடிகையாக இந்த வயதிலும் வலம் வரும் அந்த நடிகையை மேக்கப் இல்லாமல் அருகே சென்று அவரது முகத்தை பார்க்கவே பயமாக இருக்கும் என பிரபலம் ஒருவர் கிண்டலாக பேசியிருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாப் ஹீரோயினாக வலம் வரும் அந்த நடிகை மேக்கப்பிற்கு மட்டும் பல லட்ச ரூபாயை மாதந்தோறும் செலவு செய்து வருகிறார் என்றும் பர்சனலாக ஒரு பியூட்டிஷனை எப்பவுமே கூடவே வைத்திருக்கிறார் என்றும் அந்த பிரபலம் ரிவீல் செய்துள்ளார்.
முன்பை போல இல்லாமல் தற்போது தூங்கும் போதுக் கூட மேக்கப்போடு தான் அந்த நடிகை தூங்குகிறார் என்றும் திடீரென யாராவது தன்னை பார்க்க வந்து விட்டால் அர்த்தராத்திரியில் எழுந்து மேக்கப் போட முடியாது என்பதற்காக இப்படியொரு ஏற்பாட்டுடன் அந்த நடிகை வலம் வருகிறாராம்.
பிளாஸ்டிக் சர்ஜரி வேறு: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட காஸ்மெடிக்ஸ் சர்ஜரிக்களை செய்துக் கொண்டு தனது முகத்தையும் உடல் அமைப்பையும் பக்காவாக மாற்றி வைத்திருக்கிறாராம் அந்த பிரபல நடிகை.
ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி ஒரு அளவுக்குத் தான் பலனளிக்கும் என்றும் மேக்கப் தான் முழுமையான அழகு மங்கையாக வெளியே காட்ட உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அதிகமாக அதற்கு செலவு செய்து வருகிறாராம் நடிகை.
உச்சத்தில் மார்க்கெட்: இந்த வயதிலும் நடிகையின் மார்க்கெட் கொஞ்சம் கூட குறையாமல் அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அந்த நடிகை கோடிக் கணக்கில் சம்பளம் பெற்றுத் தரும் தனது முகத்திற்கு லட்சத்தில் கூட செலவு செய்யவில்லை என்றால் எப்படி என நெருங்கிய நண்பர்களிடமே பந்தாவாக சொல்லி வருகிறாராம்.
அம்பலமான மேக்கப் ரகசியம்:சமீபத்தில் வெளியூரில் நடந்த ஷூட்டிங் போது அதிகாலையில், நடிகை முகத்தை கழுவியபடி வந்தபோது தான் அவரது ரியல் தோற்றமே அந்த பிரபலத்துக்கு தெரிந்து அப்படியே ஷாக் ஆகி விட்டாராம்.
ஒரு மாசத்துக்கு சுமார் 2.5 லட்சம் வரை வெறும் மேக்கப்பிற்காக மட்டும் அந்த நடிகை செலவு செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாய்க்கிழவி மாதிரி இருந்துட்டு மேக்கப் மூலமாக எப்படி மேட்ச் பண்ணி பல படங்களை கேட்ச் செய்து வருகிறார். எல்லாம் திறமை தான் என அந்த பிரபலம் சமீபத்தில் நடிகையின் வளர்ச்சி குறித்து கோடம்பாக்கம் பிரிட்ஜ் மீது நின்றுக் கொண்டு இன்னொரு நண்பரிடம் பகிர்ந்த தகவல்கள் அப்படியே காற்றில் பறந்து தீயாக பரவி வருகிறது என்கின்றனர்.
இந்த நடிகை மட்டுமில்லை பல முன்னணி நடிகைகளும், மேக்கப்பிற்காக பல லட்சங்களையும் பிளாஸ்டிக் சர்ஜரிக்களையும் செய்து தான் வண்டியை ஓட்டி வருகின்றனர் என்றும் பேச்சுக்களுடன் சிரிப்பு சத்தங்களும் எதிரொலித்து வருகின்றன.