ரஷ்ய அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ளது ரஷ்யா.
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய் அதிபர் விளாடிமிர் புடினை கொலை செய்ய முயன்றது தான் உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது. ரஷ்ய மாளிகையை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கும் வீடியோக்கள் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட பின் அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபரின் அரசு மாளிகையான செஞ்சதுக்கத்தை (Red sqaure) நோக்கி வரும் ட்ரோன், மாளிகையின் மேற்கூரையில் கொடி பறந்த இடத்தில் மோதி விடித்தது ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் பெயரால் போர் நடத்தி வரும் அமெரிக்காவின் மறைமுக கொலை தாக்குதல் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்த நிலையில் தான் கடந்த ஓராண்டுக்கு முன் ரஷ்யா போரை தொடங்கியது. அப்படி உக்ரைனை சம்மதிக்கவிட்டால், அவர்கள் ரஷ்யாவின் வாயில்பிரிவுகளில் படைகளை நிறுத்துவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
சீண்டும் நேட்டோ
ரஷ்யா என்ற ஒரு நாடு, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரை எதிர்த்து சமாளித்துவருகிறது. நேட்டோ படையினர் உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் போரிட்டு வருகின்றனர். அவர்களை சமாளிக்கௌ ரஷ்யா தனது வாக்னர் குரூப் என்ற தனியார் கூலிப்படையை இறக்கியுள்ளது. இந்தநிலையில் தான் ரஷ்ய அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அதிபர் புடின் உயர்தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முறை கொலயில் தப்பித்தவர்
ரஷ்ய அதிபரை கொல்ல முயன்ற சம்பவம் இது முதல்முறை அல்ல, இதற்கு முன் ஆறு முறை அதிபர் புடினை கொல்ல முயற்சிகள் நடந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில், சர்வாதிகாரி ஹிட்லரை படிய வைத்து வென்றதை கொண்டாடும் ராணுவ அணிவகுப்பு நடத்தப்போகும் நிலையில், அதிபரை கொல்ல முயற்சிகள் நடந்துள்ளது. நிச்சயமாக பெரிய அளவில் சதி பிண்ணப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: 550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை.. போதும்டா சாமி நிறுத்திடு.. நீதிமன்றம் ஷாக்.!
தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புடினின் நீண்ட கால ஊடகத்துறை செயலர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, கொல்ல இரண்டு ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. எங்களுக்கு தெரியும் இந்த தாக்குதல் அமெரிக்காவால் சொல்லப்பட்டு உக்ரைனால் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொது வெளியில் எப்படி கையாள்வது என்பதையும் அறிவோம், தனிப்பட்ட வழியில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’’ என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.