கிஹலி,
கிழக்கு ஆப்பிரிக்க அமைந்துள்ள நாடு ருவாண்டா. இந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மாகாணத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Related Tags :