வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹூஸ்டன்: அமெரிக்காவில் விமானம் ஒன்றின் றெக்கையில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததால், விமானம் புறப்படுவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனிலிருந்து, அட்லாண்டா மாகாணத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. மதிம் 12:35 மணிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தில் பயணிக்க வந்த பயணி ஒருவர் விமானத்தின் இடது புற றெக்கை நுனியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததை கண்டுபிடித்தார்.
உடனே அதனை வீடியோவாக எடுத்து, அதில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதாகவும், விமானம் புறப்பட தாமதாகும் எனவும் டுவிட்டரில் பதவியேற்றினார்.
இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு படையினர் விமான றெக்கை நுனியில் கூடு கட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை அப்புறப்படுத்தினர். இதனால் விமானம் 3 மணி நேர தாமதத்திற்கு பின் மாலை 4:30 மணிக்கு புறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement