சென்னை: சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து.வைத்தார் சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது.
முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவில் செல்ல முடியும்.
இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். இதன் உட்புறம் பார்க்க உலகத்தரத்துடன் இருக்கும். முதல் நாளிலேயே இதில் பயணிக்க மக்கள் ஆர்வமாக டிக்கெட் புக் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது என்பதால் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதன் வேகம் அதிகம் என்று கூறப்பட்டாலும் இந்த ரயில் செல்ல கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகிறது.
சாதாரணமாக இப்போதெல்லாம் ஆம்னி வாகனங்களும் கூட 6 மணி நேரத்தில் இதே ரூட்டில் செல்வதால், இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது இன்னும் வேகமாக 5 மணி நேரத்தில் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார்.
இந்த ரயிலில் பயணம் செய்யும் போது அவரை சந்தித்து பொதுமக்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதேபோல் அவர் மிகவும் சீரியஸாக பேப்பர் படித்தபடி வந்தார்.
கையில் தமிழ் நாளிதழ் ஒன்றை வைத்துக்கொண்டு மிகவும் சீரியஸாக பேப்பர் படித்தபடி அவர் வந்தார். இடை இடையே அவரை சந்திக்க வந்த பொது மக்களிடம் பேசினார்.
பொதுவாக சேலத்தில் இருந்து செல்ல கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்வார். ஆனால் இன்று வந்தே பாரத் ரயிலை அவர் பயன்படுத்தினார்.
வானதி சீனிவாசன்: முன்னதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதே வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சம்பவம் கவனம் பெற்றது.
இந்த ரயிலை பற்றி குறிப்பிட்ட அவர்.. புல்லட் ரயில் கனவு நிறைவேற்றப்படுவதாக தெரிவித்து உள்ளார். சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலில் பயந்தித்த அவர் Rotating Chair வசதியை பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துள்ளார்.
அவருடன் பாஜக எம்.எல்.ஏ சி.சரஸ்வதி உடன் இருந்தார். இவர்கள் ஒன்றாக அந்த சேரை சுற்றி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர். அவர்களின் முகம் முழுக்க சிரிப்போடு, சிறியப் குழந்தைகள் போல இப்படி நடந்து கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.