Flipkart Smartphone Deal: ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகையில் பல ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றாலும், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் குறைவாக இருந்தால், அவர்களுக்காக பல நுழைவு நிலை (எண்ட்ரி லெவல்) ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான டீலை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எந்த ஸ்மார்ட்போனில் இந்த சலுகை கிடைக்கிறது
நாம் இந்த பதிவில் ரியல்மீ சி30 (Realme C30) பற்றிய விவரங்களை காணவுள்ளோம். அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 60Hz புதுப்பிப்பு விகிதம் வழங்கப்படுகிறது. 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை இதில் காணலாம். Realme C30 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமராவை கொண்டுள்ளது.
Unisoc T612 செயலி ரியல்மீ சி30 -இல் கொடுக்கப்பட்டுள்ளது. Realme C30 ஆனது 5000 mAh லித்தியம் அயன் பேட்டரியை கொண்டுள்ளது. இதனால் இது நீண்ட நேரம் நீடித்து இருக்கும். நீண்ட நேரம் நீடிக்கும். இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும் உள்ளது. நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அதன் ஸ்டைலில் நீங்கள் எந்த குறையும் காண மாட்டீர்கள். இதில் அடிப்படை அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவு நிலை வரம்பிற்கு ஏற்ப இதில் அளிக்கப்பட்டிருக்கும் விவரக்குறிப்புகள் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும்.
பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?
சலுகைகளைப் பற்றி பேசுகையில், இதில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலை அசல் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையில் ரூ.5,450 -க்கான ஒரு மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.549 செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
எனினும், வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், அவர்களிடம் எக்ஸ்சேஞ் செய்துகொள்ள பழைய ஸ்மார்ட்போன் இருப்பது அவசியமாகும். அவர்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இல்லையென்றால், இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியாது. இந்த பிளிப்கார்ட் ஆஃபர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் இந்த ஆஃபர் தொடர வாய்ப்பு உள்ளது. ஆகையால் நீங்களும் இதை பயன்படுத்தி கொள்ள விரும்பினால் இது உங்களுக்கான பொன்னான வாய்ப்பாகும்.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் விரைவில் அதன் பிரபலமான பிக் சேவிங் டேஸ் விற்பனை (Big Saving Days Sale) மூலம் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்கவுள்ளது. இந்த விற்பனை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடைபெறும். பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு சேல் மே 4 முதல் தொடங்கிவிடும். ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் கேட்ஜெட்டுகள் வரை இந்த விற்பனையில் அற்புதமான பல சலுகைகள் கிடைக்கும்.
பிளிப்கார்ட்டின் அட்டகாசமான சேல்
விற்பனைக்கு முன், பிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. அதன்படி, ஐபோன் 13 மற்றும் சாம்சங் எஸ்21 ஃப்ஈ 5ஜி (Samsung S21 FE 5G) ஆகியவற்றை இந்த சேலில் மிக குறைந்த விலையில் வாங்க முடியும்.