மும்பை: ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ நிறுவனம், அதன் மாணவர் கார் திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில் நடத்தும் மெக்கட்ரானிக்ஸ் தொழில் பயிற்சி கூடத்தில் பயிலும் மாணவர்கள், ‘ஸ்கோடா ரேபிட்’ செடான் காரின் ‘கேப்பிரியோலெட்’ வகையை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உலகளவில், 2011 முதல் இந்த பயிற்சி கூடத்தை நடத்தி வரும் ஸ்கோடா நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் நடத்துகிறது. தற்போது இந்த இந்திய மாணவர் குழுழு, இந்த காரை உருவாக்கியுள்ளனர்.
இந்த பயிற்சி கூடத்தில் 10வது படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்றரை ஆண்டுகள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. வகுப்பறையில் பெற்ற பயிற்சியை நடைமுறைப்படுத்தும் வகையில், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து, திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர்.
‘ரூப்’ உடைய இந்த ரேபிட் காரை, ரூப் இல்லாத கேப்பிரியோலெட் வகை காரை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், நம்பிக்கையுடன் செயல்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த காரை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகளவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் ‘அஸூபி’ மாணவர் கார் திட்டத்தின் மூலம், 2014ம் ஆண்டு முதலே இது போன்ற கார்களை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement