டாக்கா,—–நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சாலிபுராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
ஹிந்து சமூகத்தை சேர்ந்த இந்த மாணவியை உள்ளூர் இளைஞர் கவுசர் மியா என்பவர், தினமும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த மாணவி நேற்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்த கவுசர் மியா, 19, கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில், பலத்த காயங்கள் ஏற்பட்டு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கவுசர் மியாவை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement