2 வருஷம் இருப்பார்ன்னு சொன்ன மருத்துவர் வாக்கு.. மனோபாலாவிடம் பொய்த்தது.. இறப்புச் சான்றிதழ் சொல்வது என்ன?

உடல் நலக்குறைவால் உயிரிழந்த இயக்குனர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீட்டில் மருத்துவ ஓய்வில் இருந்த மனோபாலாவை பரிசோதித்த மருத்துவர், இன்னும் இரண்டு வருடங்கள் படுக்கையில் இருப்பார் என்று தெரிவித்த நிலையில் இரண்டே நாட்களில் மனோபாலா உயிரிழந்த சோகம் அரங்கேறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு…

தமிழ் திரை உலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மனோபாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் திரை உலகில் நடிகர்கள் விவேக் , மயில்சாமி மரணங்களை தொடர்ந்து மனோபாலாவின் உயிரிழப்பும் பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது.

முன்னதாக கல்லீரல் பாதிப்புக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோபாலாவை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். அவரது ஒரே மகன் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் அமெரிக்காவில் இருந்து தனது தந்தையை பார்க்க வந்ததாக கூறப்படுகின்றது.

அவர் வருவதற்கு முன்பு வரை பல்வேறு திரை உலக பிரமுகர்கள் மனோபாலாவை சந்தித்துச்சென்றதாகவும், அதன் பின்னர் மனோபாலாவை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்காத மகன் , மனோபாலாவுக்கு இன்பெக் ஷன் ஆகிவிடும் என்று கூறி தவிர்த்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக மனோபாலாவை பரிசோத்த மருத்துவர், இன்னும் இரண்டு வருஷத்துக்கு மனோபாலா படுத்த படுக்கையிலேயே சிகிச்சையில் இருப்பார், அதற்கு மனதை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சப்பாடு தொடங்கி அனைத்தும் இனி படுக்கையில் தான் என்று கூறிச்சென்றதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் மனோபாலா இறந்து போனதாக அவரது மகன் தெரிவித்தது தங்களுக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் மருத்துவரின் வாக்கு கூட பொய்த்து போனதே என்று அவரது திரை உலக நண்பர்கள் வேதனை தெரிவித்தனர்.

கணையத்தில் ஏற்பட்ட தொற்றுக்காக மருந்துகள் உட்கொண்டு வந்த மனோபாலாவுக்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர் ஆனந்த குமார் என்பவர் சான்று வழங்கி உள்ளார்.

இன்னும் சில தினங்களில் தனது தாயை அழைத்துக் கொண்டு மனோ பாலாவின் மகன் அமெரிக்க புறப்பட்டு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.