சீனாவில் தொழிலாளர் தின தொடர் விடுமுறையில் சுற்றுலாத் தளங்களுக்கு அதிக மக்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரையிலான 5 நாட்கள் தொடர் விடுமுறையில் 274 மில்லியன் பேர் சுற்றுலாத் தளங்களுக்கு சென்றதாக கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 70.83 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா வருவாய் சுமார் 21.42 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.