சென்னை: வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்.
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அவர் பின்னர் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆனால், தற்போது முழுக்க முழுக்க இசையமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜிவி பிரகாஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் பப்ளிக்காக கொஞ்சி விளையாடியது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷிடம் கொஞ்சி விளையாடிய ஜிவி பிரகாஷ்:வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், சில வருடங்களாக ஹீரோவாகவும் மாஸ் காட்டினார். இதனால், அவருக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் குறையவே, தற்போது நடிப்பதை குறைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான், ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அதேநேரம் சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், இதுவரை எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத ஜிவி பிரகாஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் கொஞ்சி விளையாடியது வைரலாகி வருகிறது.
அதாவது. ஜிவி பிரகாஷை டிவிட்டரில் டேக் செய்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “நீங்க எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர், அந்த சவுண்ட் கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே” எனக் கேட்டுள்ளார். அதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள ஜிவி பிரகாஷ், “டியர் ஐஸ்ஸு அந்த சவுண்ட் மியூசிக் இல்லம்மா, நாய்ஸ்” என கூறியுள்ளார். இந்த டிவிட்டர் உரையாடல்களை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஐஸ்வர்யா ராஜேஷ் கோபமான எமோஜியுடன் “சரி நான் தூங்கப் போறேன்” என ஜிவி பிரகாஷை டேக் செய்து பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பதிவிற்கும் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில், “அய்யோ அப்போ நான் ஓடப் போறேன்” என ஃபன்னியாக குறிப்பிட்டுள்ளார். திடீரென ஐஸ்வர்யா ராஜேஷும் ஜிவி பிரகாஷும் இப்படி டிவிட்டரில் கொஞ்சி விளையாடுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னய்யா நடக்குது இங்க… தலைவா நீ நல்லா ஃபன் பண்ற… ரெண்டு பேரும் சேர்ந்து என்னய்யா பண்றீங்க” என விதவிதமாக கமெண்ட்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் எதேனும் படம் உருவாகலாம், அதற்கான அப்டேட் தான் இந்த டிவிட்டர் உரையாடல் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், அது என்ன சத்தம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.