சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு, விநாயகன் என்ற நட்சத்திர பட்டாளத்துடன் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு ராஜஸ்தான், ஜெய்சால்மர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. அண்மையில் தனியார் விருது விழாவில் பேசிய நெல்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படம் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in