‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினியின் படம் எதுவும் வெளியாகததால் ‘ஜெயிலர்’ படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும் இளம் இயக்குனரான நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்த வெறித்தனமான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூலில் இந்தப்படம் வரவேற்பை பெற்றாலும் விமர்சனரீதியாக ஏகப்பட்ட சறுக்கலை சந்தித்தது. ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பினையும் இந்தப்படம் முழுமையாக நிறைவு செய்யவில்லை.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் ;அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினியை இயக்க பல இளம் இயக்குனர்கள் போட்டி போட்டனர். இதனையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சன் ராசியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். நெல்சனுடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ரிலீசுக்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ படம் சொதப்பியதால் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் நெல்சன். இந்தப்படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் இயக்கி வருகிறார்.
The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சை: தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை.!
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக மாஸான வீடியோவுடன் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வெறித்தனமான வீடியோ ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நீண்ட இடைவேளைக்கு பின் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் ‘ஜெயிலர்’ படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
டைவர்ஸ் போட்டோ ஷுட் நடத்த இதுதான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை.!