கோலிவுட் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெறித்தனமாக உருவாகி வருகிறது இந்தப்படம். ‘லியோ’ படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடித்து வருவதால் ஒவ்வொருவரிடமும் படம் குறித்த அப்டேட்டை தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்து வரும் ஒருவர் ‘லியோ’ படம் குறித்து அளித்துள்ள அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை எந்தவொரு பிளாப் படங்களும் கொடுக்காமல் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியானது. கமலின் தீவிர ரசிகராக தன்னை எல்லா மேடைகளிலும் அடையாளப்படுத்தி கொள்ளும் லோகேஷ், அவரை வைத்தே ‘விக்ரம்’ படத்தை இயக்கி கோலிவுட் சினிமாவே வியக்கும் ஹிட்டை கொடுத்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற மிரட்டலான கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். வசூல் மற்றும் விமர்சனரீதியாக ‘விக்ரம்’ படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
‘மாஸ்டர்’ படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. பூஜையுடன் துவங்கிய ‘லியோ’ படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்து வந்தது. அண்மையில் காஷ்மீர் ஷெட்யூலை முழுவதுமாக நிறைவு செய்த படக்குழுவினர் இந்தியா திரும்பினர். இதனையடுத்து விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Jailer: போடு வெடிய.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்: ‘ஜெயிலர்’ படத்தின் தெறியான அப்டேட்.!
இந்நிலையில் ‘லியோ’ படத்தில் நடித்து வரும் மேத்யூ அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படம் குறித்து பேசிய போது, இந்தப்படத்தில் தான் க்ளீன் ஷேவ் லுக்கில் வருவதாகவும், தனக்கு படத்தில் இயல் என்ற தங்கை கதாபாத்திரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் குறித்து பேசிய போது, ‘தளபதி அடிபொலி’ என்றும் தெரிவித்துள்ளார். மேத்யூ பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
‘லியோ’ படத்தில் விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா இணைந்து நடித்து வருகிறார். அத்துடன் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் ,மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டைவர்ஸ் போட்டோ ஷுட் நடத்த இதுதான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை.!