அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக பேமிலி ஆடியன்ஸை கொண்ட நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களாக தேர்ந்தெடுத்து வயது வித்தியாசமின்றி ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.
என்னதான் இவரது படங்கள் விமர்சன ரீதியாக முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக லாபகரமான படங்களாகவே அமைகின்றன. அதன் காரணமாகவே இவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என ஆல்ரவுண்டராக கலக்கி வருகின்றார்.
எதிர்காலத்தில் இயக்குனரானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
Manobala: நம்பி ஏமாந்துட்டேன் சார்..மனோபாலாவிடம் மனம்விட்டு பேசிய தளபதி..!
ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு இப்படம் உருவாக இருக்கின்றது. எனவே இப்படத்திற்காக பிரத்யேகமாக பயிற்சியெல்லாம் மேற்கொண்டு வருகின்றார் சிவகார்த்திகேயன். விரைவில் இபபடத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதமே இப்படம் வெளியாக இருந்ததாகவும், ஆனால் ஜூன் மாதம் உதயநிதியின் மாமன்னன் படம் வெளியாகயிருப்பதால் மாவீரன் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போவதாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவீரன் திரைப்படம் ஒரு மாதம் முன்னராகவே அதாவது ஜூலை மாதமே வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தை ரஜினியின் படத்தோடு மோதவிடுவாரா இல்லை ஜூலை மாதம் சோலோவாக ரிலீஸ் செய்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
என்னதான் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஒரேசமயத்தில் வெளியானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்குமே தவிர படக்குழுவினருக்கு கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் இரு பெரிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் வசூல் சிதறும், இதன் காரணமாக இரு படங்களுக்கும் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது. எனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற அதிகவாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.