Manobala: மனோபாலாவின் உடலை பார்த்ததும் கண்கலங்கி சோகமே உருவாக நின்ற விஜய்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Thalapathy Vijay: மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் விஜய். மனோபாலவின் மகனின் கையை பிடித்துக் கொண்டு விஜய் நின்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.

​மனோபாலா​Manobala: பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா மரணம்: திரையுலகினர் அதிர்ச்சிநடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோபாலா மே 3ம் தேதி காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 8 மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இறந்தது திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மனோபாலாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவகார்த்திகேயன்நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
​விஜய்​சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்ட மனோபாலாவின் உடலுக்கு தளபதி விஜய் அஞ்சலி செலுத்தினார். கண்ணாடி பெட்டிக்குள் மனோபாலா உயிரற்று இருந்ததை பார்த்ததும் விஜய் கண் கலங்கிவிட்டார். மனோபாலாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவரின் ஒரே மகனின் கையை பிடித்துக் கொண்டு சோகமே உருவாக நின்றார் விஜய்.
​தளபதி​Manobala: போதும் இறைவா நிறுத்திக்கோ, தாங்க முடியலனு சொன்ன மனோபாலாவே போயிட்டாரேவிஜய் என்றால் மனோபாலாவுக்கு மிகவும் பிடிக்கும். நிகழ்ச்சி ஒன்றில் விஜய் பற்றி மனோபாலா கூறியதாவது, மன அழுத்தம் இருந்தால் தம்பி விஜய்யின் பாடல்களை கேளுங்கள், அவ்வளவு எனர்ஜி வரும். வீரம் வேண்டும்னா அவர் படத்தை பாருங்க, காதல் வேண்டும் என்றால் அவர் படத்தை பாருங்க. நகைச்சுவைனாலும் பாருங்க என்றார். அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடித்து வந்தார் மனோபாலா. இது தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். லியோ மட்டும் அல்ல கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.
​பிரியம்​விஜய் மீது தனி பிரியம் வைத்திருந்தார் மனோபாலா. விஜய் படம் என்றால் ஒரேயொரு காட்சி என்றால் கூட என்னை கூப்பிடுங்க நான் வந்து நடிக்கிறேன் என்றார். இந்நிலையில் தான் லியோவில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வந்தார். தன்னுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த மனோபாலா இறந்துவிட்டார் என்பது விஜய்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது என்பது அவர் முகத்தில் நன்றாகத் தெரிகிறது.

​உழைப்பாளி​மனோபாலாவுக்கு ஒரேயொரு மகன் தான். அவர் தன் மனைவியுடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இருந்தாலும் கடினமாக உழைத்து வந்தார் மனோபாலா. மகன் தான் செட்டிலாகிவிட்டாரே என வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கவில்லை. படங்களில் பிசியாக நடித்து வந்த அவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவர் அந்த யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
​ஆச்சி​மனோரமா ஆச்சி பற்றி கோவை சரளா பேசிய வீடியோவை தான் மனோபாலா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கோவை சரளாவுடன் மனோபாலா பேசியதை பார்த்தவர்கள் கண் கலங்குகிறார்கள். மனோரமா ஆச்சியை பற்றி பேசிய கையோடு அவரை நேரில் சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கே சென்றுவிட்டீர்களா மனோபாலா என்கிறார்கள் ரசிகர்கள். வாழ்க்கை முழுவதும் அனைவரையும் சிரிக்க வைத்தவர் தற்போது அழ வைத்து சென்றுவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.