Manobala: விவேக், மயில்சாமி, இப்போ மனோபாலா: சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அழ வைக்கிறார்களே

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
Manobala comedy: படங்களில் நம்மை சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அழ வைத்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

​மனோபாலா​இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மே மாதம் 3ம் தேதி காலமானார். 69 வயதான மனோபாலா இறந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சிரித்த முகமாக இருந்ததுடன் அனைவரையும் சிரிக்க வைத்தவர் இப்படி அவசரப்பட்டு போய்விட்டாரே என்று தான் பிரபலங்களும், ரசிகர்களும் புலம்புகிறார்கள்.
உதயநிதி”என் மீது பாசம் கொண்டவர்” உதயநிதி இரங்கல்!
​கெரியர்​தனக்கு பிடித்த விஜய்யின் லியோ படத்தில் நடித்து வந்தார் மனோபாலா. மேலும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்தார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டார். இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது அதே இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த மனோபாலா இறந்துவிட்டார்.
​விவேக்​தன் நகைச்சுவை மூலம் நம்மை எல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கொரோனா தடூப்பூசி போட்ட பிறகு அவர் கொடுத்த பேட்டி தான் கடைசி பேட்டி என்பது தெரியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் வேதனைப்பட்டார்கள். விவேக்கிற்கு மாரடைப்பால் மரணம் என்பதை பலராலும் இன்னும் நம்ப முடியவில்லை.
​மயில்சாமி​விவேக்கை அடுத்து நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். சிவபக்தரான அவர் சிவராத்திரி நாளில் இரவு முழுக்க கோவிலில் இருந்தார். வீட்டிற்கு வந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இரவு முழுவதும் கோவிலில் மயில்சாமியை பார்த்தவர்களோ, காலையில் அவர் இல்லை என்பதை நம்ப மறுத்தார்கள். மற்றவர்களை சிரிக்க வைத்த சிவபக்தர் சிவராத்திரி அன்று காலமானார்.
​போதும்​மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மனோபாலாவோ, போதும் ஆண்டவா, நிறுத்திக்கோங்க, இனியும் தாங்க முடியாது என்றார். ஆனால் அடுத்ததாக அவரே சென்றுவிட்டார். ரசிகர்களை சிரிக்க வைத்தவர்கள் எல்லாம் அடுத்தடுத்து சென்றிருப்பது வேதனையான விஷயம்.

​Manobala: போதும் இறைவா நிறுத்திக்கோ, தாங்க முடியலனு சொன்ன மனோபாலாவே போயிட்டாரே

​விஜய்​Manobala: மனோபாலாவின் உடலை பார்த்ததும் கண்கலங்கி சோகமே உருவாக நின்ற விஜய்
மனோபாலாவின் உடலுக்கு தளபதி விஜய் அஞ்சலி செலுத்தினார். மனோபாலாவின் மகனின் கையை பிடித்துக் கொண்டு விஜய் சோகமாக நின்றதை பார்த்தவர்கள் கண் கலங்கினார்கள். மன அழுத்தமா விஜய் பட பாடல்களை கேளுங்கள், சந்தோஷமாகிவிடுவீர்கள். காதல், சோகம், சந்தோஷம் என்று எதுவாக இருந்தாலும் விஜய் படங்கள் இருக்கிறது என்று கூறியவர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.

​வேலை​மனோபாலாவுக்கு ஒரேயொரு மகன் தான். அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தன் மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார் மனோபாலா. மகன் தான் செட்டில் ஆகிவிட்டாரே என்று அவர் ஓய்வு எடுக்கவில்லை. கடைசி வரை கடினமாக உழைத்து வந்தார். இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூட தன் யூடியூப் சேனலில் கோவை சரளாவின் பேட்டி வீடியோவை வெளியிட்டார். அதில் அவரை பார்த்தவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர் கடைசியாக போட்ட ட்வீட்டில் தன் யூடியூப் சேனலுக்கு குறும்படங்களை அனுப்பி வைக்கலாம் என்றார். அது தான் அவரின் கடைசி ட்வீட்டாக இருக்கும் என யாருமே நினைக்கவில்லை.

​Ajith: அஜித் பட்ட வேதனையும், கஷ்டமும் வேறு எந்த நடிகனும் பட்டது இல்ல: ஃபீல் பண்ண மனோபாலா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.