NEET 2023 : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…12ஆம் வகுப்பு ரிசல்ட்… மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 4 நாட்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. வரும் 8ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் நிலையில், ஒருநாள் முன்னதாக 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. வழக்கத்தை விட அரசு பள்ளி மாணவர்கள் இம்முறை அதிக அளவில் நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்திருப்பதாக தெரிகிறது. எனவே தேர்வு முடிவுகள் எப்படி வரும் என்ற அச்சத்துடன் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

​தஞ்சையில் அன்பில் மகேஷ்இதுதொடர்பாக சில அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கியுள்ளார். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
நீட் தேர்வு அச்சம்அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது, நீட் தேர்வு என்பது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை போல இன்னொரு பரீட்சை. இதைக் கண்டு மாணவ, மாணவிகள் யாரும் பயப்படக் கூடாது. உங்களின் திறமைக்கான நாற்காலி என்றும் காத்திருக்கும். இதற்காக தான் ’நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.​
​​
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்எனவே நமது மாணவச் செல்வங்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும். இதே நம்பிக்கையுடன் வரும் 8ஆம் தேதி வெளியாகும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருங்கள் என்றார். மேலும் தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு மதிப்பெண் பட்டியலை வாங்க வரும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.
வழிகாட்டும் ஆசிரியர்கள்உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? எந்த படிப்புகள் ஏற்றதாக இருக்கும்? அதற்கு சரியான கல்லூரிகள் எவை? போன்ற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்துரைப்பர். எனவே வேறு யாரிடமும் மாணவர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் ஆசிரியர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள்நீட் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ, அதிலிருந்து அரசு மாணவர்கள் அதிக ஆர்வமுடன் தான் காணப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டிருந்தேன்.
​​
அதிக அளவில் விண்ணப்பம்அவர்கள் அனுப்பிய தகவலில் நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் முன்பை விட அதிகமான விண்ணப்பம் செய்திருப்பது தெரிகிறது. எனவே நீட் தேர்வு எழுதும் போதும், முடிவுகள் வெளியாகும் போதும் நம்பிக்கை உடன் இருங்கள். வெற்றிகரமான வாழ்க்கை அமையும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.