சென்னை: நடிகை ராய் லக்ஷ்மி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், பான் இந்தியா அளவில் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1984ம் ஆண்டு மே 5ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் ராம் ராய் மற்றும் மஞ்சுளா ராய்க்கு மகளாக பிறந்தவர் ராய் லக்ஷ்மி.
லக்ஷ்மி ராயாக 2005ல் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சரியாக படங்கள் ஓடுவதில்லை என்பதால், நியூமராலஜி படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என மாற்றிக் கொண்டார்.
கவர்ச்சி நடிகை ராய் லக்ஷ்மியின் பிறந்தநாள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் என்பது போல பெயரை மாற்றியும் பெரிதாக ராய் லக்ஷ்மிக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
கிரிக்கெட் வீரர் தோனியின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட ராய் லக்ஷ்மி அஜித்தின் மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வந்தாலும் இன்னமும் அவரால் டாப் ஹீரோயினாக வலம் வர முடியவில்லை. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.
கைவசம் பல படங்கள்:கடந்த ஆண்டு தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராய் லக்ஷ்மி இந்த ஆண்டு போலா இந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்திருந்தார். மேலும், ஆனந்த பைரவி எனும் தெலுங்கு படத்திலும் கேங்ஸ்டர் 21 என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியவில்லையே என்றெல்லாம் நடிகை ராய் லக்ஷ்மி பெரிதாக கண்டு கொள்வதே இல்லை. கிடைக்கும் படங்களில் தனது போர்ஷனை கச்சிதமாக நடித்துக் கொடுத்து வருகிறார்.
சம்பளம் எவ்வளவு?: ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை ராய் லக்ஷ்மி அடிக்கடி தனது நண்பர்களுடன் வெளிநாடுகளில் நடக்கும் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அதிகபட்சமாக புதிய படங்களில் நடிக்க 60 முதல் 80 லட்சம் ரூபாய் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தி லெஜண்ட் படத்தில் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
சொத்து மதிப்பு: நடிகை ராய் லக்ஷ்மி சினிமாவில் நடிப்பதை விடவும் அதிகமாக விளம்பரப் படங்களில் நடித்து சம்பாதித்து வருகிறார் என்றும் பல பிரபல ஃபேஷன் நிறுவனங்களின் தூதுவராக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
ராயல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் நடிகை ராய் லக்ஷ்மிக்கு பெங்களூரு மற்றும் சென்னையில் சொந்தமாக வீடுகள் உள்ளதாகவும் அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 3 மில்லியனில் இருந்து அதிகபட்சமாக 5 மில்லியன் இருக்கும் என தகவல்கள் வெளீயாகி உள்ளன.
அதாவது இந்திய மதிப்பில் 30 முதல் 40 கோடி வரை நடிகை ராய் லக்ஷ்மியிடம் சொத்து இருப்பதாக கூறுகின்றனர். பெரிதாக படங்கள் இல்லை என்றாலும் பெரியளவில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார் ராய் லக்ஷ்மி என தகவல்கள் வெளியாகி உள்ளன. கவர்ச்சி நடிகை ராய் லக்ஷ்மிக்கு இந்த பிறந்தநாள் முதல் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!