அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இனி ரஜினி படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என சிலர் பேச தற்போது மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக கமிட்டாகியுள்ளார் ரஜினி.
இப்படங்களை வெற்றிபெற செய்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் தலைவர். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் வெற்றிபெறாமல் போக அவரின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் ஒரு வெற்றி போதாது பல வெற்றி தேவை என முடிவெடுத்த ரஜினி தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார்.
Manobala: மனோபாலாவின் வாழ்நாள் ஆசை இதுதானாம்..கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதே..!
தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி அடுத்ததாக ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படங்களின் பணிகளை முடித்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் தன் 171 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் ஆகியோரின் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளார் நெல்சன். இப்படம் நெல்சனுக்கும், ரஜினிக்கும் மிகமுக்கியமான படம் என்பதால் படத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர். எனவே இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்ற எதிரிபார்ப்பு அனைவர்க்கும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ரஜினிக்கு ராசியில்லை என்ற ஒரு காரணத்தால் ஜெயிலர் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் பேசப்பட்டு வந்தது.
ஏனென்றால் ரஜினியின் பாபா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி தோல்வியடைந்ததால் ரஜினி ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட வேண்டாம் என கூறியதாக தகவல் வந்தது. இந்நிலையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால், ரஜினி சென்டிமெண்ட்ஸ்க்கு இடம்கொடுக்காது ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதமே வெளியிட முடிவெடுத்துள்ளாராம்.
சுதந்திர தினம் விடுமுறை நாட்களை குறிவைத்து ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது