ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கும் அந்த தொடரில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
ஆக்ஷன் காட்சிகள் என்று வந்துவிட்டால் சமந்தாவுக்கு டூப் போட சுத்தமாக பிடிக்காது. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து குணமாகி வரும் சமந்தா யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என அர்ப்பணிப்புடன் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.
கடுமையான ஒர்க்அவுட், ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை அடுத்து ஐஸ் பாத் எடுத்திருக்கிறார் சமந்தா. ஒரு பை நிறைய ஐஸ் கட்டிகளை போட்டு அதில் அமர்ந்திருக்கிறார். அது தசைகள் வீங்காமல் இருக்க உதவும். தான் ஐஸ் பாத் எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு டார்ச்சர் டைம் என தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
உடம்புக்கு முடியாத நேரத்தில் சமந்தா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள். ஒரு கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டார். நடிகை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என பாராட்டு குவிகிறது.
சமந்தா ஒரு பக்கம் டார்ச்சர் அனுபவிக்க மறுபக்கம் வருண் தவானும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிடாடல் ஷூட்டிங்கின்போது காயம் அடைந்திருக்கிறார் வருண் தவான். வேனிட்டி வேனில் மதிய உணவு இடைவேளையில் தன் காயங்களை சுத்தம் செய்து மருந்து போட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
ப்ரியங்கா சோப்ரா நடித்திருக்கும் சிடாடல் ஹாலிவுட் வெப்தொடரின் இந்திய வெர்ஷன் தான் சிடாடல். அண்மையில் லண்டனில் நடந்த ஹாலிவுட் சிடாடல் நிகழ்ச்சியில் சமந்தாவும், வருண் தவானும் கலந்து கொண்டார்கள்.
அந்த நிகழ்ச்சியில் தன் இடுப்பு தெரியும்படி உடை அணிந்திருந்தார் சமந்தா. அப்பொழுது அவர் இடுப்பு பகுதியில் இருந்த நாக சைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூ தெரிந்தது. அதை பார்த்த ரசிகர்களோ, இந்த டாட்டூவை இன்னுமா வைத்திருக்கிறீர்கள் சமந்தா?. மீண்டும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினார்கள்.
சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. மீண்டும் சேர வாய்ப்பில்லை என்பது போன்று சமந்தா தெரிவித்தார். ஆனால் நாக சைதன்யாவோ விவாகரத்து பற்றி பேசவே இல்லை.
நாக சைதன்யாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் வசித்து வந்த பங்களாவில் தான் சமந்தா தற்போது இருக்கிறார். சமந்தாவை பிரிந்த பிறகு ஹோட்டலில் தங்கி வந்த நாக சைதன்யா அண்மையில் தான் புது பங்களா வாங்கினார். அதுவும் சமந்தா இருக்கும் பகுதியிலேயே வீடு வாங்கியிருக்கிறார்.
Naga Chaitanya: வாழ்க்கையின் மிகப் பெரிய வருத்தம்: சமந்தா சொன்ன அதே பதிலை சொன்ன நாக சைதன்யா
இந்நிலையில் காதல் முறிந்தாலோ, விவாகரத்து பெற்றாலோ பிரிவுக்கு பிறகு தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என அறிவிப்பது உண்டு. இந்நிலையில் பிரிவுக்கு பிறகு நண்பர்களாக இருப்பது குறித்த நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, யார் கேட்டது அந்த நட்பை என பதில் அளித்தார்.
அதை பார்த்தவர்களோ, நாக சைதன்யா சொல்வது தான் சரி. பிரிவுக்கு பிறகு எப்படி நட்பாக இருக்க முடியும், யாருக்கு வேண்டும் அந்த நட்பு என்கிறார்கள்.