Sarath Babu: சரத்பாபு இறக்கவில்லை, உயிருடன் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்பாதீங்க: சகோதரி

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவரின் உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்டது.

என்னோட இந்த சீன் பார்த்துட்டு..அப்பா கண் கலங்கிட்டாரு
இந்நிலையில் சரத்பாபுவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. சரத்பாபு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Manobala: பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

இந்நிலையில் சரத்பாபு இறந்துவிட்டதாக மே 3ம் தேதி மாலை செய்திகள் வெளியானது. அது குறித்து அறிந்தவர்களோ, இந்த நாள் தமிழ் சினிமாவுக்கு மோசமான நாள் ஆகும். காலையில் நடிகரும், இயக்குநருமான மனோபாலா இறந்துவிட்டார். மாலையில் சரத்பாபு இறந்திருக்கிறார். ஒரே நாளில் இரண்டு திறமைசாலிகள் சென்றுவிட்டார்கள். இது என்ன கொடுமை என்றார்கள். ஆனால் சரத்பாபு இறக்கவில்லை. அவர் நலமாக இருப்பதாக சகோதரி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சரத்பாபுவின் சகோதரி கூறியிருப்பதாவது, சரத்பாபு பற்றி சமூக வலைதளங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் சற்று குணமடைந்திருக்கிறார். சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து செய்தியாளர்களிடம் பேசுவார் என நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் சரத்பாபு. அதன் பிறகே ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஏப்ரல் 20ம் தேதி ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸால் பாதிக்கப்பட்ட சரத்பாபுவின் சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சரத்பாபு சிகிச்சை பெற்று தேறி வரும் நிலையில் அவர் இறந்துவிட்டதாக வெளியான தகவல் அவரின் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

1973ம் ஆண்டு தன் கெரியரை துவங்கினார் சரத்பாபு. அவரின் நிஜ பெயர் சத்யம் பாபு. பட்டினப் பிரவேசம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவர் தமிழ் தவிர்த்து கன்னடம், மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை ஒன்பது முறை பெற்றிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரத்பாபுவுக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. ஆனால் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதால் அவரின் போலீஸ் கனவு நிறைவேறவில்லை. இதையடுத்து குடும்ப வியாபாரத்தை கவனிக்குமாறு அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் சரத்பாபுவுக்கு நடிகராக வேண்டும் என்று ஆசை. இதையடுத்து தன் ஆசையை அம்மாவிடம் சொல்லி அவரின் ஆசியுடன் நடிகரானாவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர் அல்லது முதலாளியாக நடித்து தலைவர் ரசிகர்களின் அன்பை பெற்றார். அண்ணாமலை படத்தில் ரஜினியின் உயிர் நண்பராக நடித்தார். முத்து, வேலைக்காரன் ஆகிய படங்களில் ரஜினியின் முதலாளியாக நடித்திருந்தார் சரத்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்பாபு படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். சரத்பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வசந்தமுல்லை. அதில் அவர் டாக்டராக நடித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.