அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
Digital யுகம் என்று அழைக்கப்படும் இந்த யுகத்தில் மக்கள் தினசரி பயன்படுத்தும் பல பொருட்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் இதனால் ஆபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன் புழக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில் மக்களை 24 மணிநேரமும் வேவு பார்க்கும் பொருட்கள் பல உள்ளன.
நீங்கள் ஸ்மார்ட்போன், கேமரா, கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் நம்மை உளவு பார்க்கும் என்று நினைத்தால் அது தவறு. மக்கள் யாரும் யோசனை கூட செய்யாத பொருட்கள் மூலமாக உங்களை உளவு பார்க்கமுடியும். அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
வீட்டில் உள்ள கேமராநாம் வீடுகளில் உள்ளே வைத்திருக்கும் கேமரா மூலமாக நம்மை உளவு பார்க்கமுடியும். அனைத்து ஸ்மார்ட் கேமரா இயங்கவும் தனியாக ஒரு ஆப் தேவை. இந்த ஆப் மூலமாக நம்மை உளவு பார்க்கலாம்.
ஸ்மார்ட் அசிஸ்டன்ட்நகர் புறங்களில் பல வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் டிஜிட்டல் அசிஸ்டன்ட் கருவிகளான அமேசான் அலெக்ஸா, கூகுள், Apple Homepod போன்றவற்றை வைத்து உங்களை உளவு பார்க்கலாம்.
ஸ்மார்ட் வாட்ச்தற்போது மக்கள் அவர்களின் ஆரோக்கியத்தை கணக்கிட தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச் ஒரு உளவு பார்க்கும் கருவி என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?. நிச்சயம் ஒரு ஸ்மார்ட் வாட்சை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை சுலபமாக உளவு பார்க்கமுடியும்.
மேலும் நமது விரல் அசைவுகளை கூட இவற்றால் கணிக்கமுடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நமது ஸ்மார்ட்போன்களில், ATM பின், கம்ப்யூட்டர் போன்றவற்றை திறக்க உதவும் பாஸ்வேர்ட் போன்றவற்றை 64 முதல் 96% வரை சரியாக கணிப்பதாக கூறுகிறார்கள்.
கார்கள்தற்போது வெளியாகும் அனைத்து கார்களிலும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி வசதிகள் போன்றவை உள்ளன. இவை நாம் கார்கள் ஓட்டும்போது நம்மிடம் இருந்து டேட்டா எடுக்கிறது. இந்த டேட்டா வைத்து நம்மை உளவு பார்க்கலாம்.
ஹெட்போன்கள்இப்போதெல்லாம் ப்ளூடூத் ஹெட்போன்களின் பயன்பாடு மிக அதிகமாகிவிட்டது. பல ஹெட்போன் ப்ளூடூத் அசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது. இதை வைத்துகூட நீங்கள் பேசுவதை எல்லாம் உளவு பார்க்கமுடியும்.
விளையாட்டு பொம்மைகள்குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் GPS, ஆடியோ ரெகார்ட் செய்யும் கருவிகள், வீடியோ ரெகார்ட்,கேமரா போன்றவற்றை வைத்து உங்களை உளவு பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் Mouseயாரும் எதிர்பார்க்காத விஷயமாக நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது உடன் பயன்படுத்தும் Mouse மூலம் நம்மை உளவு பார்க்கலாம். சிங்கப்பூர் நாட்டில் 2012 ஆம் ஆண்டு ஒருவர் கம்ப்யூட்டர் mouse உள்ளே மைக்ரோபோன், SIM கார்டு போன்றவற்றை உள்ளே வைத்து 10 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்கமுடியும்.
Smart Vacuum robotsபெரும் பணக்காரர்களின் வீடுகளில் சுத்தம் செய்வதற்கு ஸ்மார்ட் வேக்யூம் கிளீனர் ரோபோட் பயன்படுத்தப்படும். அவை தானாகவே வீடுகளின் அளவை கணக்கிட்டு மேப் செய்து டேட்டா வைத்துக்கொள்ளும். இதன் மூலமாகவும் உங்களை உளவு பார்க்கலாம்.