ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
கொண்டாட்டம்சூர்யா என்னதான் இடையில் தொடர் தோல்விகளை கொடுத்து வந்தாலும் சூரரைப்போற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். சுதா கொங்காரா இயக்கத்தில் OTT யில் வெளியான இப்படம் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமும் பரபரப்பான வெற்றியை பெற்றது. இவ்விரு படங்களின் வெற்றி சூர்யாவிற்கு புது உத்வேகத்தை தர விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்தார் சூர்யா. நெகட்டிவான ரோலக்ஸ் என்ற ரோலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து சூர்யா அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
எதிர்பார்ப்புவிக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யாவின் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்களின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. என்னதான் பாலாவின் இயக்கத்தில் உருவான வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினாலும் வெற்றிமாறனின் படம் , சிவாவின் படம் என செம பிசியாக இருந்து வருகின்றார். இதில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை 2 படத்தின் பணிகள் முடிவடைந்த பின் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து சிவா இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
பிரம்மாண்டம்சிவா அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யாவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் கங்குவா என்ற படத்தை இயக்கி வருகின்றார். பொதுவாக சிவாவின் படம் என்றாலே மாஸ் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என்ற பேச்சை கங்குவா படத்தின் மூலம் உடைத்தெறிய முயற்சித்து வருகின்றார் சிவா. வரலாறு கதையம்சம் கொண்ட படமாக கங்குவா உருவாகி வருகின்றது. மேலும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் உருவாகி வருகின்றது. தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் வனப்பகுதியில் நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு துவக்கத்தில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
சாதனைஇந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் OTT ரைஸ்ட் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். இப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் காரணமாக டிஜிட்டல் மற்றும் OTT உரிமையை வாங்க போட்டாபோட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து கங்குவா படத்தின் OTT உரிமையை அமேசான் நிறுவனம் 80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஒரு தமிழ் படத்தின் OTT உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். விஜய், அஜித், ரஜினி படங்களை காட்டிலும் சூர்யாவின் கங்குவா படத்தின் OTT உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புது சாதனையை சூர்யா நிகழ்த்தியுள்ளார். இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் கங்குவா படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான். இந்நிலையில் கங்குவா திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது