தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா. ‘வயசானாலும் உங்க அழகும் இளமையும் குறையவே இல்லை’ என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ திரிஷாவுக்கு கனகச்சிதமாக பொருந்தும். அந்தளவிற்கு தனது இளமையான அழகால் இன்றளவும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார். இந்நிலையில் இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் திரிஷாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
சென்னை பொண்ணான திரிஷா ஸ்கூல் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு ‘மிஸ் சேலம், மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா அதே ஆண்டில் வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக நடித்ததின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆர்ப்பாட்டமில்லாத, பக்கத்து வீட்டு பெண் போல் இருந்த திரிஷாவின் அழகிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மயங்கினார்கள். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவரது ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவுள்ளது. அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் திரிஷாவின் ஜெஸ்ஸி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.
அதே போல் ‘96’ படத்தில் ஜானுவாக நடித்து பலரையும் வசீகரித்தார். படம் முழுக்க ஒரே காஸ்டியூமில் க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை மயக்கினார் திரிஷா. இவருக்கு வயதாகி விட்டது போன்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி முன் வைக்கப்பட்டாலும் இன்றளவும் ‘உயிர் உங்களுடையது தேவி’ என சொல்லும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். அதற்கு சான்றாக அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை சொல்லாலாம்.
Leo: தளபதி குறித்து ஒத்த வார்த்தை சொன்ன ‘லியோ’ பட நடிகர்: குஷியான விஜய் ரசிகாஸ்.!
இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயை தாண்டி குந்தவையாக ஜொலித்தார் திரிஷா. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதே போல் இவர் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா இருக்கும் க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பிறந்தநாளில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.