தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் வசித்துவருகின்றனர். அவரது மகன் பிரவீன். 7 வயதாகும் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர், வீட்டருகே உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர், காயத்திற்கு ஃபெவி குயிக் பயன்படுத்தப்படுத்தியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் சிறுவனின் அழுகையை பார்த்த தாய், மருத்துவர்களிடம் ஏன் ஃபெவி குயிக் பயன்படுத்துகிறீர்களே எனக் கேட்டுள்ளார். அந்த அந்த மருத்துவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதனையடுத்து சுனிதா, தனது மகனை வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்குள்ள மருத்துவர் அவரை பரிசோதித்து, காயத்திற்கு ஃபெவி குயிக் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். நெற்றியில் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்தால் பயன்படுத்த வேண்டிய ஃபாவிக்விக் மருந்தை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.