சென்னை: இஸ்லாமியர்களை மோசமாக காட்டல, இந்து பெண்களைத் தான் கேவலமா காட்டியிருக்காரு இயக்குநர் சுதிப்தோ சென் என தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் விளாசி எடுத்திருக்கிறார்.
தி கேரளா ஸ்டோரி என்கிற டைட்டிலில் நேற்று வெளியான படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெகு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ளன.
தியேட்டர்களை முற்றுகையிட்டு இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.
பிபிசி ஆவணப் படத்திற்கு மட்டும் ஏன் தடை: பிரதமர் மோடி முதல் வானதி ஸ்ரீனிவாசன் வரை தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்கிற சூப்பரான வசனத்தை கையாண்டு வரும் நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது போல ப்ளூ சட்டை மாறன் அப்போ அந்த பிபிசி ஆவணப் படம் மற்றும் காட்மேன் உள்ளிட்ட படங்களை ஏன் தடை செய்யணும் அதையும் ரிலீஸ் செய்யலாமே என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்து பெண்களை கேவலப்படுத்தி இருக்காரு: அல்லா பெரிய கடவுள் என்று சொன்னாலே இந்து பெண்கள் மதம் மாறிவிடுவார்களா? நர்சிங் படிக்கும் பெண்களுக்கு டாக்டர் படிக்கும் இஸ்லாமிய நபர்கள் பாய் ஃபிரெண்டாக கிடைத்தால் பெரிய இடத்தில் செட்டில் ஆகி விடலாம் என லவ் ஜிகாத்தில் சிக்கி மதம் மாறி விடுகின்றனரே இந்து பெண்களை இவ்வளவு மோசமாக காட்டியதற்கு அந்த இயக்குநரை கண்டித்து இந்து அமைப்பினர் தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் சாட்டையை சுழற்றி இருக்கிறார்.
படமாகவும் நல்லா இல்லை: தி கேரளா ஸ்டோரி கதை, அந்த படம் செய்யும் இஸ்லாமிய விரோதத்துக்கு எதிரான பிரச்சாரங்களை எல்லாம் விட்டு விடுவோம். படமாகவாது நல்லா இருக்கான்னு பார்த்தா, அதுவும் இல்லையே என பளிச்சென சொல்லி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ஆப்கானிஸ்தானை காட்டுறாங்க, ஆனால், அங்கே என்ன பண்றாங்க இந்த பெண்ணை கடத்திக் கொண்டு என்ன செய்யுறாங்க என்றெல்லாம் காட்டவே இல்லை. காதலிப்பவன் ஒருத்தன் கட்டிக் கொள்பவன் ஒருத்தன் எல்லாத்துக்கும் அந்த பெண் பூம்பூம் மாடு மாதிரி எப்படித்தான் தலையாட்டுதோ தெரியல என்றும் கெட்டிக்காரன் புளுகு வெறும் 8 நாளைக்குத்தான் இந்த படத்தை பார்த்தால் கூட ஒன்றுமே ஆகப் போவதில்லை என விமர்சித்துள்ளார்.