இந்த கொளுத்தும் வெயிலில் எங்காவது குளு குளு பிரதேசத்துக்கு 2 நாட்கள் சென்று வந்தால் இதமாக இருக்குமே எனத் தோன்றுகிறதா? அப்போது பலரும் புறப்படுவது ஏழைகளின் குலு மணாலியான ஊட்டி தான்.அதில் முக்கியமாக 2 அம்சங்கள் நமது பயணத்தின் நாட்களை நிர்ணயிக்கும். ஒன்று பட்ஜெட். மற்றொன்று சீசன் சமயத்தில் ரூம்ஸ் கிடைப்பது.
இந்நிலையில் கோடை விடுமுறையொட்டி ஊட்டியில் பல நிகழ்ச்சிகளை மாநாட்டை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது..இதன்படி இந்த மாதம் 6 மற்றும் 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
7-ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான், 11-ந் தேதி படகு போட்டி, 12,13,14-ந் தேதி கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி, 13,14,15-ந் தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா, 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, 21 22-ந் தேதிகளில் குன்னூரில் தேயிலை சுற்றுலா, 25 முதல் 31-ந்தேதி வரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கோடை விழா, 27 28-ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி, 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதில் சிறப்பம்சமாக 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.ஊட்டி 200-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை கவரவும் இந்தாண்டு கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒருமுறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம். அங்கிருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம், சுமார் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.விமான நிறுவன உத்தரவின் படி சுமார் 1000 அடி உயரம் வரை பறந்து ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களே எதற்காக காத்திருக்கீங்க? உடனே பிளான் போடுங்க… ஊட்டிக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க..!