ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள்… புதிய சாதனை படைத்த விராட் கோலி.!

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 55 ரன்கள் எடுத்தார்.

அத்துடன் ஐபில் வரலாற்றில் அதிக 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7036 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த வரிசையில் 6536 ரன்களுடன் ஷிகர் தவன் 2ம் இடத்திலும், 6189 ரன்களுடன் டேவிட் வார்னர் 3வது இடத்திலும், 6063 ரன்களுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும், 5528 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா 5வது இடத்திலும் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.