ஓடும் பஸ்சில் காதலியை குத்தி தற்கொலைக்கு முயன்ற காதலன்| A lover tried to commit suicide by stabbing his girlfriend in a moving bus

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாடு மூலங்காவைச் சேர்ந்தவர் சனில், 25. கோட்டயத்தில் ஒரு ேஹாட்டலில் சர்வர். தமிழக எல்லையில் கூடலுாரைச் சேர்ந்தவர் சீதா, 24. ஆலுவாவில் தனியார் நிறுவன ஊழியர்.

இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மூணாறு – பெங்களூரு கேரள அரசு பஸ்சில் அங்கமாலியில் சீதா ஏறினார்; எடப்பாள் என்ற இடத்தில் சனில் ஏறினார். சீதா இருந்த சீட்டிற்கு அடுத்த சீட்டில் சனில் அமர்ந்தார்.

இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், சனிலை கண்டக்டர் வேறு சீட்டில் மாற்றி அமர வைத்தார். இரவு 11.30 மணிக்கு திடீரென தன் வசம் இருந்த கத்தியால் சீதாவை குத்திய சனில், தன் கழுத்தையும் அறுத்தார்.

அதிர்ச்சி அடைந்த பயணியர் மற்றும் பஸ் ஊழியர்கள், இருவரையும் திரூராங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சனில் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.